திருவண்ணாமலையில் உள்ள வேட்டவலம் ரோடு சந்திப்பு பகுதியில் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதில் இருந்து வெளியேறும் குடிநீர் அருகில் செல்லும் கழிவுநீர் கால்வாயில் சாக்கடையுடன் கலந்து செல்கிறது. கடந்த 2 மாதங்களாக இதே நிலை நீடிக்கிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.