திருவண்ணாமலை-வேட்டவலம் சாலையில் உள்ள விஜயாமால் அருகில் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. குடிநீர் வினியோகம் செய்யும் போதெல்லாம் குடிநீர் வீணாக வெளியேறி அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் கலக்கிறது. மேலும் கழிவுநீர் குடிநீருடன் கலக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியாவது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்ய வேண்டும்.
- தரணிஷ்வரன், திருவண்ணாமலை.