ஆரணி பழைய பஸ் நிலைய வளாகத்தில் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி மக்களுக்கு பயன் அளிக்கவில்லை. அதற்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அதன் மூலம் ஒரு நாள் மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டது. ஆனால், இதுவரை குடிநீர் வழங்கப்படவில்லை. அந்தத் தொட்டி காட்சி பொருளாக உள்ளது. மக்கள், பயணிகள் வெளிமார்க்கெட்டில் குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்க வேண்டிய நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மக்களுக்கு குடிநீர் வழங்குவார்களா?
-விநாயகம், ஆரணி.