குடிநீர் தட்டுப்பாடு

Update: 2022-07-28 11:09 GMT
திருவெண்ணெய்நல்லூர் அடுத்த கிரிமேடு ஊராட்சிக்குட்பட்ட பிரதான சாலையில் அமைக்கப்பட்ட மினி குடிநீர் தொட்டி உடைந்து சேதமாகி உள்ளது. மேலும் அதற்கான மின் மோட்டாரும் பழுதாகி கிடப்பதால் போதிய குடிநீர் இன்றி கிராம மக்கள் பரிதவித்து வருகிறார்கள். குடிநீர் தொட்டி சேதம் மற்றும் மின் மோட்டார் பழுதால் ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்