ஈரோடு வீரப்பன்சத்திரம் தெப்பக்குள வீதியில் உள்ள குடிநீர் குழாயில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாயில் கசிவு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக குடிநீர் பற்றாக்குறை உருவாகும் நிலையும் உள்ளது. உடனே குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.