பழனி அருகே அக்கரைப்பட்டி பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியின் சுவர்கள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடிய வகையில் உள்ளதால் அப்பகுதி மக்களுக்கு கடும் அச்சுறுத்தல் உள்ளது. காரணம் அதன் அருகில் கோவில், சுகாதார வளாகம் அகியவை உள்ளன. மாலையில் ஏராளமான குழந்தைகள் அங்கு விளையாடுகின்றனர். எனவே உயிர்பலி வாங்க காத்திருக்கும் அந்த தொட்டியை இடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.