தஞ்சையை அடுத்த திருவையாறு வட்டம் திருவாலம்பொழில் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இது முறையான பராமரிப்பின்றி சேதமடைந்துகாணப்படுகிறது. இதனால் தொட்டியில் தண்ணீரை சேமிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், தொட்டியை சுற்றிலும் பாசி படர்ந்து செடி,கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தட்டுப்பாடு இன்றி தண்ணீர் கிடைக்கவும், குடிநீர் தொட்டிகளை பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்