குண்டும், குழியுமான சாலை

Update: 2023-01-04 13:00 GMT

பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடியில் இருந்து காவயல் பகுதிக்கு தார்சாலை செல்கிறது. இந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகனங்கள் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. மழைக்காலங்களில் அந்த வழியாக செல்பவர்களின் நிலைமை சொல்லி மாளாது. எனவே பழுதடைந்த அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்