புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், சிலட்டூர்குறிஞ்சி நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் சமைப்பதற்கும், தங்களின் அன்றாட தேவைக்கும் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் குடிநீருக்காக தொலை தூரம் சென்று தண்ணீர் பிடித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.