வேப்பூர் அருகே உள்ள ஐவதுகுடியில் மாதிரி பள்ளி உள்ளது. இங்கு 570 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இங்கு மாணவர்களுக்கு குடிநீர் வழங்கும் வகையில் ஊராட்சியில் இருந்து 2 குடிநீர் தொட்டி வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டிக்கு கடந்த 2 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். மாணவர்களின் நலனை கருத்தி கொண்டு இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் வலியுறுத்தி வருகிறார்கள்.