சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

Update: 2022-08-22 12:07 GMT

உளுந்தூர்பேட்டை அருகே பரிந்தல் மேட்டு காலனியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பலத்த சேதம் அடைந்துள்ளது. தொட்டியின் மேற்கூரையில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து தண்ணீருக்குள் விழுகின்றன. மேலும் தூண்களும் பலத்த சேதம் அடைந்துள்ளது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி தற்போது மிகவும் பலவீனம் அடைந்து காணப்படுகிறது. எனவே இடிந்து விழும் முன் தொட்டியை சீரமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்