திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி தாணி பூண்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான மின் மோட்டார் ஒன்று உள்ளது. இதில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் கசிந்து வீணாக வெளியேறுகிறது. இதை தடுக்க தற்காலிகமாக ஒரு துணியை வைத்து அடைத்து வைத்துள்ளனர். ஆனாலும் தண்ணீர் கசிவு நின்றபாடில்லை. எனவே உடனடியாக உடைந்த குழாயை சரி செய்ய நடவடிக்க எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.