தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே சுஞ்சல்நத்தம் ஊராட்சி திண்ணை பெல்லூரில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள காமாட்சி அம்மன் ஆலயம் முன்பு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே குடிநீர் இணைப்பு வழங்கி, குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
-பாலாஜி, ஏரியூர், தர்மபுரி.