ஊட்டி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கு பார்சன்ஸ்வேலி அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில் லவ்டேல் சந்திப்பு பகுதியில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு இருப்பதால் தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே குழாய் உடைப்புகளை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.