தஞ்சை கீழவஸ்தாசாவடி அருகே கல்லணைக்கால்வாய் கரையில் மண் சரிவு ஏற்பட்டிருந்தது. இதனால் கரையில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் நடந்து சென்று வந்தனர். அதுமட்டுமின்றி தண்ணீர் அதிக அளவில் செல்வதால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் புகுந்து விடுகிறது. இதன்காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுவந்தனர். இதுகுறித்தி "தினத்தந்தி" புகார்பெட்டியில் செய்தி வெளியானது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட கல்லணைக்கால்வாய் கரையை கம்பு மற்றும் மண் மூட்டைகள் அடுக்கி பலப்படுத்தி உள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" நாளிதழுக்கும் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.