கடலூர் முதுநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாமல் உள்ளதால் இதில் இருந்து வரும் குடிநீர் அசுத்தமாக வருகிறது. இதை பயன்படுத்தும் மாநகர மக்களுக்கு பலவித நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே மாநகர மக்கள் நலன் கருதி குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.