மின் இணைப்பு இல்லாத குடிநீர் தொட்டி

Update: 2022-08-16 16:43 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா எர்ரணஹள்ளி ஊராட்சி ரெட்டியூர் விஸ்தேரிபள்ளம் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. அந்த குடிநீர் தொட்டிக்கு ஓராண்டுகளாக மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் குடிநீர் இல்லாமல் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டிக்கு மின் இணைப்பு வசதி செய்ய வேண்டும்.

-பாண்டியன், ரெட்டியூர், தர்மபுரி.

மேலும் செய்திகள்