சென்னை தண்டலம் ஏரிக்கரை தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அந்த பள்ளத்தில் உள்ள குடிநீர் குழாய் எதிர்பாராத விதமாக சேதமடைந்துவிட்டது. இதனால் குடிநீர் வீணாகி வருவதோடு அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கும் வழிவகுக்கிறது. எனவே சம்பந்த பட்ட அதிகாரிகள் சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.