நாமக்கல் நகராட்சி சார்பில் வீடுகள்தோறும் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து நீரை சுத்திகரிப்பு செய்து குழாய் மூலம் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில் நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் பிள்ளையார் கோவில் வீதி வரை இருபுறமும் அடிக்கடி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை பலன் இல்லை. எனவே நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்தால் தண்ணீர் வீணாவதை தவிர்க்கலாம்.