குடிநீர் வினியோகம்

Update: 2022-08-11 13:03 GMT


பவானி அருகே உள்ள ஆண்டிகுளம் ஊராட்சி பழைய காடையம்பட்டியிலும், தொட்டிபாளையம் ஊராட்சி புதுக்காடையம்பட்டியிலும் கடந்த ஒருவாரமாக ஆற்று குடிநீர் வினியோகம் செய்யவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட உள்ளாட்சித்துறை அலுவலர்கள் உடனடியாக குடிநீர் கிடைக்க ஆவன செய்வார்களா.?


மேலும் செய்திகள்