நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஒன்றியம் பெரியகரசபாளையம் நான்கு ரோட்டில் இருந்து ஓலப்பாளையம் செல்லும் சாலையில் விவசாய நிலத்திற்கு செல்லூம் தண்ணீர் குழாய் உடைந்து நீண்ட நாட்களாக தண்ணீர் வீணாகிறது. இதனால் அந்த பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் தார்சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி வருகிறது. பொதுமக்கள் சாலையில் செல்ல முடியாத அளவு பள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே உடைந்த தண்ணீர் குழாயை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பரமசிவம், ஓலப்பாளையம், நாமக்கல்.