திருவள்ளூர் மாவட்டம் அரண்வாயல் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்ட அடிபம்பு பழுதடைந்து இருப்பது தொடர்பாக தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதிகாரிகளின் சீரிய நடவடிக்கையால் பழுதடைந்த அடிபம்பு சரி செய்யப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றியை தெரிவித்தனர்.