விழுப்புரம் காகுப்பம் இந்திரா நகரில் உள்ள மினிகுடிநீர் தொட்டி தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் காட்சிப்பொருளாக உள்ளது. இந்த குடிநீர் தொட்டியை சுற்றிலும் முட்புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே காட்சிப்பொருளாக இருக்கும் மினி குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.