விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஏமாப்பூர் ஊராட்சி பிள்ளையார் கோவில் தெருவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது. இதில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இந்த குடிநீர் தொட்டியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சேதமடைந்த குடிநீர் தொட்டியை இடித்துவிட்டு, புதிய தொட்டி கட்டித்தர அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.