வீணாகும் குடிநீர்

Update: 2022-08-08 10:59 GMT
நாகை மாவட்டம் நாகூர் கங்களாஞ்சேரி சாலை வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஒக்கூரில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிறுவன வாசலில் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையோரத்தில் குடிநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குழாய் உடைப்பு காரணமாக கடம்பங்குடி, பெருஞ்சாத்தன்குடி, வாழஒக்கூர், ஒக்கூர்,வெங்கிடாங்கால், உத்தமசோழபுரம்,நரிமணம்,சுள்ளாங்கால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?





மேலும் செய்திகள்