திருவள்ளூர் மாவட்டம் அரண்வாயல் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்ட அடிபம்பு பழுதடைந்துள்ளது. இந்த அடிபம்பின் கைப்பிடி உடைந்துள்ளதால், இதை பயன்படுத்த முடியாமல் மக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பழுதடைந்த அடிபம்பை சரி செய்ய வேண்டும்.