புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பரமன்நகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக புதிய குடிநீர் தொட்டி கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணி தொடங்கப்பட்டது. தற்போது அந்த பணி கடந்த 6 மாதங்களாக தொடங்கப்படாமல் அப்படியே கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்த குடிநீர் தொட்டியை விரைந்து கட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.