மினிகுடிநீர் தொட்டி மீண்டும் பயன்பாட்டுக்கு வருமா?

Update: 2022-08-05 14:37 GMT

திட்டக்குடி நகராட்சி 7-வது வார்டில் உள்ள மினிகுடிநீர் தொட்டி பல மாதங்களாக இயங்கவில்லை. மேலும் நகராட்சி ஊழியர்கள், அங்கிருந்த மின் மோட்டாரையும் எடுத்துச் சென்று விட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி அவதியடைந்து வருகின்றனர். இதுதொடர்பாக புகார் அளித்தும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே மின்மோட்டார் பொருத்தி, மினிகுடிநீர் தொட்டியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்