சென்னை பெரவள்ளூர், பேப்பர் மில்ஸ் சாலையில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. நீண்ட நாட்களாக சாலையில் மூடப்படாமல் இருக்கும் பள்ளத்தால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது. தினமும் இந்த சாலையில் பயணம் செய்யும் மக்கள், இந்த பள்ளத்தால் பல கிலோ மீட்டர் சுற்றிவரும் நிலை ஏற்படுகிறது. எனவே மந்தமாக நடபெற்று வரும் குடிநீர் குழாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.