கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். நகராட்சி 11-வது வார்டு தனுஷ்கோடியாபுரம் தென்வடல் சந்து பகுதியில் குடிநீர் குழாயில் நல்லி இல்லாததால் கம்பை திணித்து துணியை கட்டி வைத்து இருந்தனர். இதனால் தண்ணீர் வரும் நேரங்களில் வீணாக சென்று சாக்கடையில் கலக்கிறது. ஆகையால், குடிநீர் குழாயில் நல்லியை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவர் 'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு அனுப்பிய பதிவு செய்தியாக பிரசுரமானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயில் நல்லியை பொருத்தி உள்ளனர். கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அவர் தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்து உள்ளார்.