காட்சிப்பொருளான மினி குடிநீர் தொட்டி

Update: 2022-07-31 17:43 GMT

திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட அத்திப்பட்டி 8-வது வார்டு தெற்கு தெருவில், நகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் தேவைக்காக பல மாதங்களுக்கு முன்பு மினி குடிநீர் தொட்டியை கட்டியது. ஆனால் கட்டி முடிக்கப்பட்ட சில நாட்களிலேயே பழுதானது. அதன் பிறகு அதனை பழுது பார்க்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே காட்சிப் பொருளாகவே காணப்படும், அந்த பழுதடைந்த மினி குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்