செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எலப்பாக்கம் கிராமத்தில் உள்ள குடியிருப்பு வாசிகள் பஜார் வீதியில் இருந்து நூலகம் செல்வதற்கு மண்பாதையை பொதுவழியாக பயன்படுத்தி வருகிறார்கள். இங்கு வாகனங்களில் செல்லும்போது மழைக்காலங்களில் விபத்துகள் அதிகமாக ஏற்படுகிறது. மேலும் அந்த பாதையில் செடி,கொடிகள் அடர்ந்து காணப்படுவதால் இரவு நேரங்களில் விஷ பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்டதுறை அதிகாரிகள் அந்த பாதையில் தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.