வீணாகும் குடிநீர்

Update: 2022-07-31 13:57 GMT

நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் இருந்து வெட்டூர்ணிமடம் செல்லும் சாலையில் ஒரு பெட்ரோல் நிலையம் உள்ளது. இந்த நிலையத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள ஒரு குடிநீர் குழாயில் எப்போதும் தண்ணீர் வந்து கொண்டே இருக்கும். அந்த வழியாக செல்லும் லாரி, டெம்போ உள்ளிட்ட வாகன ஓட்டிகள் தண்ணீர் பிடித்து செல்வது வழக்கம். தற்போது, இந்த குழாயின் நல்லி சேதமடைந்து குடிநீர் வீணாக பாய்ந்து கொண்டிருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த நல்லியை அகற்றி விட்டு புதிய நல்லி அமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும்.

ஆர்.டேணியல், நேசமணிநகர்.

மேலும் செய்திகள்