கன்னியாகுமரி-தூத்துக்குடி கடற்கரை சாலையில் ராதாபுரம் தாலுகா உலகரட்சகர்புரம் ரோடு இணையும் இடத்தில் சாலையில் வடக்கு பக்கம் குடிநீர் குழாய் உடைந்து உள்ளது. இதனால் தண்ணீர் வீணாக செல்வதோடு, அந்த பகுதியில் குளம் போல் தேங்கி கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த குடிநீர் குழாய் உடைப்பை விரைந்து சரிசெய்யும்படி வேண்டுகிறேன்.