பந்தலூர் அருகே பந்தபிளா அண்ணா நகரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். குடிநீருக்காக நீண்ட தூரம் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே இனிமேலாவது குடிநீர் தட்டுப்பாடு நீங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.