‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2025-08-24 17:09 GMT

திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு போதிய குடிநீர் வசதிகள் இல்லாமல் உள்ளதால் நோயாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருவதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளிகளுக்கு குடிநீர் வசதிகளை ஏற்படுத்தி உள்ளனர். எனவே செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள், நோயாளிகள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்