வேடசந்தூர் அருகே வே.புதுக்கோட்டை ஏ.டி.காலனியில் உள்ள பெண்கள் கழிப்பறையில் தண்ணீர் வசதி இல்லை. இதனால் கழிப்பறை பயன்பாடு இன்றி கிடக்கிறது. இதன் காரணமாக பெண்கள் அந்த கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே தண்ணீர் வசதியை ஏற்படுத்தி, கழிப்பறையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.