திட்டக்குடி நகராட்சி வழியாக சிறுமுளை, பெருமுளை, புலிவலம், கீரனூர், ஆவட்டி, கழுதூர் உள்பட பல்வேறு கிராமங்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினகயோகம் செய்யப்படுகின்றது. இந்நிலையில் திட்டக்குடி நகராட்சி பெரியார் நகர் அருகே இந்த கூட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பயனடையும் கிராம மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் தினமும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தும் கண்டுகொள்ளவில்லை. ஆகவே கூட்டுக் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.