வீணாகும் குடிநீர்

Update: 2022-07-27 13:43 GMT

நாகர்கோவிலில் இருந்து மணக்குடி வழியாக கன்னியாகுமரி செல்லும் நெடுஞ்சாலையில் புத்தளம் பகுதியில் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக குழாய்கள் பதிக்கப்பட்டள்ளது. இந்த குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வீணாக பாய்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சோபி, புத்தளம். 

மேலும் செய்திகள்