திசையன்விளை அருகே கரைச்சுத்துபுதூர் சூடுஉயர்ந்தான்விளை ஊரின் மத்தியில் பெருமாள் கோவில் அருகில் பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி தற்போது பயனற்ற நிலையில் இருக்கிறது. இதில் இருந்து அடிக்கடி சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுகிறது. இதனால் மக்கள் அச்சத்துடன் அந்த பகுதியை கடந்து செல்கிறார்கள். எனவே இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.