நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி அருகே நாகூர்-நன்னிலம் சாலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் உள்ளது. இந்த நிலையில் பனங்குடி பிராவடையான் ஆற்றுபாலத்தில் அருகே உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில தினங்களாக தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் அந்த குழாயின் மூலம் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு முறையான குடிநீர் கிடைப்பதில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பார்களா?