வீணாக்கும் குடிநீர்

Update: 2022-07-26 11:08 GMT

திக்கணங்கோட்டில் இருந்து கருங்கல் செல்லும் சாலையில் சுனாமி கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் மத்திகோடு மற்றும் கருக்குப்பனை ஆகிய இடங்களில் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வீணாக பாய்ந்து கொண்டிருக்கிறது. இதனால், சாலையில சேதமடைவதுடன், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்