சிவகங்கை மாவட்டம் மடப்புரம் ஊராட்சி கழுங்குப்பட்டி நாராயணன் தெருவில் குடிதண்ணீர் பைப் அமைக்கப்படவில்லை. இதனால் இப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு தண்ணீரின்றி மக்கள் அவதியடைகின்றனர். எனவே குடிநீர் பைப் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?