விழுப்புரம் மாவட்டம் கோனூர் பஸ் நிலையம் பெருமாள் கோவில் எதிரில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அப்பகுதியில் உள்ள சாலையை மழைநீர் தேங்காத வகையில் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.