ஈரோடு கே.என்.கே. ரோடு சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதன் காரணமாக அந்த இடம் பள்ளமாக மாறியுள்ளது. இதில் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விழுந்து விபத்துகளை சந்தித்து வருகின்றனர். உடனே குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்கவும், ரோட்டை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.