காஞ்சீபுரம் மாநகராட்சி சேக்குப்பேட்டை நடுத்தெரு பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மின் மோட்டார் வசதியுடன் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு நீர் தேக்க தொட்டி பராமரிப்பின்றி உள்ளது. இந்த தொட்டி பழுதடைந்து பல மாதங்களாக கவனிப்பாரின்றி கிடக்கிறது. மேலும் இந்த தொட்டி போஸ்டர்கள் ஒட்டும் இடமாக மாறி வருகிறது. சம்பந்தபட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நீர் தேக்க தொட்டியை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.