சங்கராபுரம் தாலுகா பூட்டை கிராமத்தில் உள்ள ஏரி துர்வாரப்படாமல் உள்ளது. இதனால் ஏரியில் போதுமான அளவு தண்ணீர் சேமித்து வைக்கமுடியாத நிலை உள்ளது. மேலும் இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் குறையும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஏரியை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.