சேரன்மாதேவி மெயின் ரோட்டில் தம்பிதோப்பு அருகில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயத்துக்கு எதிரில் குடிநீர் குழாயில் உடைப்பு தண்ணீர் வீணாக செல்கிறது. இதேபோன்று சிங்கம்பத்து கோவில் அருகிலும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன்.