குடிநீர் தட்டுப்பாட்டால் அல்லல்படும் மக்கள்

Update: 2023-08-27 18:23 GMT
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் கொசப்பாடி ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்ய, அப்பகுதி ஏரியில் இருந்து குழாய் அமைக்கப்பட்டது. ஆனால் இப்பணி நடைபெற்று 8 மாதங்கள் ஆகியும் தற்போது வரை அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அல்லல்பட்டு வருகின்றனர். எனவே, அப்பகுதியில் குடிநீர் வினியோகம் செய்ய உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்