பழனி பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் வைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை சரி செய்ய வேண்டும்.